கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் தேர்தல் நன்னடத்தை விதி என மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர், படம், அறிவிப்பு பலகைகள் மறைக்கப்பட்டன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உபயிலான கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவில் கந்தசஷ்டி கவசம் அடங்கிய கல்வெட்டுகளை பணியாளர்கள் மறைத்தனர்.
தொடர்ந்து கோயிலில் நடந்த திருப்பணி உபயோதாரர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டன. இதையடுத்து கொடைக்கானல் இந்து முன்னணியினர், பா.ஜா.வினர் கோயிலில் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம், உபயதாரரின் பெயர்கள் மறைக்கப்பட்ட பேப்பர்கள் அகற்றப்பட்டன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



