உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீதிமன்ற அனுமதி பெற்று கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது மந்தையம்மன் கோவில்., இந்த கோவிலின் பங்குனி பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கிடா முட்டு போட்டி நடத்துவதை இந்த கிராம மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.,
இந்த ஆண்டு பங்குனி பொங்கல் கொண்டாடிய போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி பெற முடியவில்லை என கூறப்படுகிறது.,

இந்நிலையில் இன்று கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உரிய அனுமதியை பெற்று கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் மாபெரும் கிடாமுட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.,
இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கருமறை, வெள்ளைமறை, குரும்பை உள்ளிட்ட பல்வேறு வகையான 80 ஜோடி கிடாக்கள் இந்த போட்டியில் பங்கேற்றன.,
நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கிடாக்களில் அதிகமுறை மோதிக் கொண்டு இந்த போட்டியில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு பித்தளை அண்டாகள் பரிசாக கிராம கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.,
உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கிடா முட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
