கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்பொழுது கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலிருந்து வந்திருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் என்னுடைய குடும்பம். அதனால் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
உண்மையான கூட்ட நெரிசலாக மட்டும் இருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது.
இந்த சம்பவம் குறித்து உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.

ஆணையத்தின் சார்பில் இதுதான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கிறது.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை நிச்சயமாக கிடைக்க வேண்டும். பெரும்பாலனோர் இளம் வயதினர். ஏழை குடும்பத்தினர்.
சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.