இராஜபாளையத்தில் செயல்படும் கேசா டி மிர் 12ம் பள்ளி மாணவன் மாவட்டத்தில் முதலிடம் பிடித்ததற்காக பள்ளி தாளாளரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் சாலையில் செயல்படக்கூடிய கேசா டி மிர் பள்ளியில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவனை பாராட்டியும் சிறப்பாக செயல்பட்ட பள்ளி தாளாளர் திருப்பதி செல்வத்தை பாராட்டி இராஜபாளையம் ஆவரம்பட்டி வளையாபதி தெரு குலாலர் சமுதாய சார்பில் நினைவு பரிசை வழங்கப்பட்டது.

அதேபோல் குலாலர் சமுதாயத்தில் 10ம் வகுப்பு 12ஆம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நினைவு பரிசு சான்றிதழ்களை இராஜபாளையம் அப்டெக் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் முத்துவேல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறங்காவலர் வழக்கறிஞர் கண்ணன் மற்றும் யோகா மாஸ்டர் நீராத்துலிங்கம் வைமா வித்தியாலயா மற்றும் கேசா டி மிர் தாளாளர் திருப்பதி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். குலாலர் சமுதாய ஊர் தலைவர் செல்வராஜ், பொறுப்புத்தலைவர் சுப்புராஜ், பொருளாளர் சக்திகணேஷ், செயலாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் ஊர் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.







; ?>)
; ?>)
; ?>)
