சபரிமலை ஐயப்பன் தரிசனம் என்பது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கும் கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோயில் இருந்த ஒரு காலம் உண்டு.
சபரிமலை ஐயப்பன் சாமியை தரிசனம் செய்ய பெண்களையும் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 4_நாள் சுற்றுப்பயணமாக
கேரளா வந்துள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள முதல்வர் பிரணராய்விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆகியோர் ஜனாதிபதி திரௌபதி முர்முவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலக்கல் சென்றவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பம்பை சென்ற ஜனாதிபதி, பம்பையில் உள்ள
கணபதி கோவிலில் இருமுடி கட்டும் சடங்கு நடைபெற்று அங்கிருந்து. ஐயப்பன் சன்னதிக்கு காவல் துறை பாதுகாப்புடன் சிறப்பு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு.

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் இன்று (அக்டோபர்_22)ம் நாள். காலை 11.55மணி முதல் 12.25 வரை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஐயப்பன் சாமூயை தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று மாலையே திருவனந்தபுரம் வந்தடைகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை காரணமாக அவர் செல்லும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இன்று பக்தர்களுக்கு ஐயப்பன் தரிசனம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.