
அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு சிறை தரப்பு விளக்கம்.
“ஏப்ரல் 1ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவரின் உடல்நிலை சீராகவே இருந்தது”.
“சிறைக்கு வந்தது முதல் கெஜ்ரிவாலின் உடல் எடையும் 65 கிலோவாகவே உள்ளது”. “நீதிமன்ற உத்தரவின்படி வீட்டில் சமைத்த உணவு தான் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படுகிறது”.
உடல்நிலை சார்ந்த அவசர சூழல் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க தயார்நிலையில் குழு- திகார் சிறை தரப்பு.
சிறையில் உள்ள கெஜ்ரிவால் நான்கரை கிலோ வரை எடை குறைந்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருந்தது.
