• Thu. Dec 4th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு வழக்கறிஞர் கொலைக்கு காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

ByKalamegam Viswanathan

Dec 4, 2025

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி யின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தென்காசி. நகரில் . அவரது அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசாமியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. மேலும் கடந்த மாதம் இது போன்ற சம்பவமும் கிருஷ்ணகிரியில் பட்ட பகலில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வழக்கறிஞர் கொள்ள பட்டார். என்பது குறிப்பிடதக்கது.

பொதுமக்கள் பாதிக்க படும் அனைத்து பிரட்சனைகளுக்கும் சட்ட ரீதியாக போராடி மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்கும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் மற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணமாக உள்ளன.
ஆகவே . தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

அரசு வழக்கறிஞர் முத்து குமாரசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .மேலும் வழக்கறிஞர் முத்து குமாரசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் இழப்பிடு ரூ 20 லட்சமும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

எனவே : அரசு வழக்கறிஞர் முத்து குமாரசாமியை கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் .மேலும் இக்கொலையில் சம்பந்த பட்ட குற்றவாளிகளுக்கு சட்டரீயாக கொடுக்கும் தண்டணை இனிமேல் கொலை குற்றங்களை செய்ய சமூக விரோதிகள் முன்வராத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.