கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக பரப்புரையில் உயிரிழப்பு விவகாரம்: சம்பவ இடம் மற்றும் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் தலைவர் நேரில் சென்று ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த 27 ஆம் தேதி கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணல் ஏற்பட்டு இதுவரை 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா மற்றும் இயக்குனர் ரவிவர்மா & விசாரணை அதிகாரி லிஸ்டர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்த பின் வேலுச்சாமி புரத்தில் உயிரிழந்த இரண்டு வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிய உள்ளார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா உடன் இருந்தனர்.