மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் முன்பு தொடங்கி பஸ் நிலையம் வரை மௌன ஊர்வலம் நடந்தது. பின், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்
படத்திற்கு,மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன்,முன்னாள் மாவட்ட
துணை செயலாளர் அய்யூப்கான், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், பங்களா சி. மூர்த்தி, சி.பி.ஆர். சரவணன், கவுன்சிலர் ஜெயகாந்தன்,, முத்து பாண்டி |அய்யங்கோட்டை விஜயகுமார்,
அரவிந்தன், முரளி, ராஜசேகர், வினோத்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்… மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி…
