• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் சிறப்பு பூஜை

ByKalamegam Viswanathan

Dec 3, 2024

குட்லாடம்பட்டியில் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சாலையில் குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் கரை கீழ்புறத்தில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணா மலையார் தியான மண்டப கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையை யொட்டி, காசி ராமேஸ்வரம் ஹரி துவார் ரிஷிகேஷ் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரால் 108 பக்தர் கள் 108 சங்கில் லிங்க வடிவிலான அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலையார் அறக்கட்டளை நிறுவனர் கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய
விநாயகர் ஆலயம், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம்,
மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சக்தி விநாயகர் ஆலயம்,
மதுரை கோதிபுரம் ஜூப்ளி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயம், ஆகிய கோயில்களில் கார்த்திகை சோமவார்த்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதே போல, மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாதர் சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் கார்த்திகை சோமவார்த்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து இருந்தனர்.