• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

யார் மீது நடவடிக்கை எடுப்பது அண்ணாமலைக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி?

அண்மையில் பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வெளிநாட்டுப் பயணம் என அவரின் செயல்களைக் கேலி செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக பேசியிருப்பதாகவும், மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் கூறியிருப்பதாகவும், அதற்கு என் நன்றிகள்” என ட்வீட் செய்துள்ளார்இந்நிலையில் தமிழக பா.ஜ.க ஐ.டி விங் தலைவர் நிர்மல் குமார்பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதம்எழுதியுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி, அண்ணாமலையின் ட்வீட்டுக்கு ‘நடவடிக்கை யார் மீது? எடுத்தவர் மீதா? நடித்தவர் மீதா? அல்லது அதைப் பார்த்து சிரித்தவர் மீதா? என பதில் ட்வீட் செய்துள்ளார்.