• Wed. Jun 26th, 2024

தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற கராத்தே தின விழிப்புணர்வு

BySeenu

Jun 17, 2024

கோவை சுண்டக்காமுத்தூர், தீத்திபாளையம்,கோவைபுதூர் என பல்வேறு இடங்களில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி எனும் பயிற்சி மையம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்சாய் சதீஷ் பயிற்சி அளித்து வருகிறார்.
இவரது பயிற்சி மையத்தில் கராத்தே பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு கோவைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச கராத்தே தினத்தை முன்னிட்டு கராத்தே கலை கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி நடைபெற்றது.

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை கவுன்சிலர் முருகேசன் துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவ,மாணவிகள் தற்காப்பு கலை கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில்,கராத்தே உடையான வெண்மை நிற உடையணிந்தபடி நான்கு வயது முதலான சிறுவர் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே பயிற்சியாளர் சென்சாய் சதீஷ்,
தற்காப்பு கலை கற்பதால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் ஒரு செயலில் முழுமையாக ஈடுபட முடிகிறது எனவும்,மாநில,தேசிய,சர்வதேச போட்டிகள் சாதிக்கும் மாணவ,மாணவிகள் கல்வி,வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
தற்போது பள்ளி, கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த கலையை பல்கலைகழக அளவில் அங்கீகரிக்கப்பட தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்ட அவர், இதனால் அதிக மாணவ, மாணவிகள் பயன்பெற முடியும் என தெரிவித்தார்.

பேரணியின் இறுதியில் கராத்தே விளையாட்டின் சில கலைகளை பொதுமக்கள் முன்பாக செய்து காண்பித்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வியந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *