• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோவையில் கராத்தே பட்டையத்தேர்வு போட்டி

BySeenu

Dec 16, 2024

கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டியில் மூன்று வயது முதலான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள் பெற்று அசத்தி்னர்.

கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 64 வது கராத்தே பட்டைய தேர்வு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தி்ல் நடைபெற்றது.

இதில் பிரவுன், பச்சை, மஞ்சள்,, புளு, ஆரஞ்சு,கருப்பு உள்ளிட்டவற்றில் பட்டையம் வழங்குவதற்கான தேர்வில் 3 வயது முதல் 35 வயது வரை உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் தியாகு நாகராஜ் கலந்து கொண்டு பட்டையம் பெறுவதற்கான கராத்தே போட்டியை நடத்தி வீரர்களை தேர்வு செய்தார்.

இதில், கட்டா, கராத்தே உள்ளிட்ட பிரிவுகளில் கருப்பு பட்டை பெற்ற தலைமை பயிற்சியாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் பட்டையங்களும் வழங்கப்பட்டது.

இதில் சுமார் எட்டு வருடங்களாக தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் 12 பேருக்கு கருப்பு பட்டையங்கள் வழங்கப்பட்டது.