விஜய்வசந்தின் நாடாளுமன்ற நிதி ரூ.34.50 லட்சம். அங்கன்வாடி, மேல்நிலை நீர் தொட்டி. திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாடாளுமன்ற நிதியில் மருங்கூர் பஞ்ஞாயாத்திற்கு உட்பட பத்மநாபன் புதூரில் சிறுவர்களுக்கான அங்கன்வாடி கட்டிடம் ரூ.14 .50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை விஜய்வசந்த் திறந்து வைத்ததுடன், குத்துவிளக்கையும் இயற்றி வைத்தார்.

மைலாடி பஞ்சாயத்து காமராஜர் நகரில் அந்தப் பகுதி மக்களின் நீண்டகால குடி நீர் பிரச்சினை கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் ரூ.20 லட்சம் செலவில் by கட்டப்பட்ட மேல் நிலை தொட்டியையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மருங்கூர் நகர தலைவர் ஹெலன், முன்னாள் வட்டார தலைவர் காலபெருமாள், பேரூராட்சி தலைவர் லெட்சுமி, துணை தலைவர் பால் ரோகிணி, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், டாக்டர்.சிவக்குமார், செயலாளர் நாகராஜன் வட்டார தலைவர் தங்கம் நடேசன் மற்றும் தி மு க கூட்டணி கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.