• Sat. Jun 29th, 2024

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என்பது தமிழகத்தில் வரலாறு படைத்த தொகுதி

விஜய் வசந்த் இரண்டாவது முறையாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக உறுதி மொழி எடுத்தார்.

சுதந்திர இந்தியாவில் திமுக ஒரு முறையும், ஜனதாதளம் ஒரு முறையும், தமாக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு முறையும், பாஜக இரண்டு முறை என வெற்றி பெற்றது.

இந்திய நாடாளுமன்றத்தின் 18 தேர்தல்களில். கன்னியாகுமரி மக்களவையில் இரண்டு இடைத் தேர்தல்கள் என மொத்தம் 20_தேர்தல்கள் கன்னியாகுமரி (நேற்றைய நாகர்கோவில்) மக்களவை தேர்தல்களில். பெரும் தலைவர் காமராஜர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

குமரி அனந்தன், வசந்த் குமார், விஜய் வசந்த் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் வெற்றி வரிசையில், குமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 13_முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் 18_வது நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன்_25)ம் நாள் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் இந்திய சாஸ்தன புத்தகத்தை உயர்த்தி பிடித்து, பெரும் தலைவர் காமராஜர், தலைவர் ராஜீவ் காந்தி புகழ் வாழ்க என உறக்க மொழிந்து , உறுதிமொழி எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *