திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேற்று திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம்.ராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாநில தணிக்கை குழு உறுப்பினர் என்.சுரேஷ்ராஜன் முன்னாள் எம்.பி. மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் சட்டமன்ற தேர்தல் குழு பொறுப்பாளர் தில்லைசெல்வம், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜோசப்ராஜ் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தாமரை பாரதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில துணை அமைப்பாளர் சிவராஜ், மாவட்ட துணை செயலாளர், பேரூர் ஊராட்சி வட்ட கழக செயலாளர்கள் உட்பட சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர்.


குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மேயர் மகேஷ் மூன்று தீர்மானங்களை முன் மொழிந்தார். அதில் முதல் தீர்மானமாக. முதலமைச்சர் மு. க. ஸ்டலினுக்கு வைத்த கோரிக்கை இளைஞரனி செயலாளர் துணை முதல்வர் பற்றிய தீர்மானம் பழுக்க வேண்டும். இளைஞர் அணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக பதவி உயர்வு கொடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற காரணமாக இருந்த கழக தலைவர் அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்தும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கழக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தமிழகம் வெற்றி பெற அன்னிய நாட்டு முதலீடு பெற அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வரை வாழ்த்தியும். கழக பொன்விழாவை முன்னிட்டு கழக உறுப்பினர்கள் வீடுகளில் கழக கொடியேற்ற பேற்ற வேண்டுமென்றும் கழகத்தை வலுப்படுத்த வீடுதோறும் இளைஞர்களை சந்தித்து திமுகவில் இணைக்க வேண்டுமென்றும் இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து கழத்தினரை இணைக்க வேண்டும். வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் கழகம் வெற்றி பெற அனைத்து உறுப்பினர்கள் பாடுபட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சிறப்பு விருந்தினர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவரது பேச்சில் நம்மை எல்லாம் அவரது ஜிம்னா ஸ்டிக் திறமை மூலம் நம் அனைவரையும் ஈர்த்தார். முதல்வர் சென்னை வந்ததும் விளையாட்டுத்துறை அமைச்சர் மூலம் இந்த குழந்தைக்கு அங்கீகாரம் பெற்று தருவேன் சென்னையில்16-ம் தேதி நடந்த , மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொது உறுப்பினர்களை அழைத்து கெளரவிக்க வேண்டும் என்று கூறினார். ‘பொது உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். கொஞ்சம் எச்சரிக்கையாக சென்று வாருங்கள் என்றார். இந்த மாவட்டத் தில் உள்ளவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் திமுக தொண்டர்கள் துங்கினால் கும்பகர்ணன் எழுந்தால் இந்திரஜித் என்பர் கலைஞர்கள் அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார்கள் நாம் வென்றோம். இ து செமி பைனல் அடுத்த போட்டியில் வென்றால் தான் உங்கள் பதவி தப்பும். கல்வி நிலையங்களில் சிலர் ஊடுருவுகிறார்கள். இப்போது கவர்னர் இருப்பது கேசுவல் பணி. இவர் தமிழகத்தில் கல்வி சரியில்லை என்கிறார். இந்த நிலையை திமுக தொண்டர்கள் அறுத்து எறிவார்கள். இந்த கூட்டம் ஒரு மரத்தின் ஆணி வேர் போன்றவர்கள். இப்போது தான் தொண்டர்கள் மகிழ்வோடு பணியாற்றுகின்றனர். தளபதி அவர்கள் கொண்டு வந்த மகளிர் திட்டம் இன்று நாடு முழுவதும் பரவி உள்ளது. தமிழக முதல்வர் மோடிக்கே கருத்துரை வழங்கும் தகுதியுள்ளவர். எமர்ஜென்சி நேரத்தில் முரசொலியில் தலைவர் கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். அப்போது சென்சார் அலுவலகம் உடன்பிறப்பே மற்றும் முக என்ற என்ற எழுத்தை எடுத்துவிட்டனர். மறு நாள் சர்வாதிகாரம் ஒழிக என்று குரல் கொடுத்தோம். ஜெ வாங்கிய பல சொத்துக்கள் இன்று கவனிப்பார் என்று கிடக்கிறது. வாங்கி போட்டவர்களுக்கே தெரியாது. தலைவரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து இருந்தனர். உயர் அதிகாரிகள் பலர் கண்டு கொள்ளவில்லை அப்போது கலைஞர் மிக சோர்வாக இருந்தார். அங்கு வந்த பெண் அதிகாரி காப்பி கொடுத்தார். உன் பதவிக்கு ஆபத்து என்றார். பரவாயில்லை. இது நீங்க கொடுத்த காக்கி உடை உங்களுக்காக உதவியதாக இது போனால் பரவாயில்லை. என்றார் இதுதான்பெண் உள்ளம் என்றார் தலைவர். இங்கு சென்ற பலருக்கு நான் தான் பணிகொடுத்தேன் பார்னர்கள் இருந்த இடத்தில் நம்மவர்கள் இருக்கட்டுமே என்று செய்தேன் என்று வருத்தப்பட்டார். தலைவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தரமறுத்தவர் தான் எடப்பாடி. 1954 -ல் எம் ஜி ஆர் வீடு வாங்கும் முன்பே சென்னையில் வீடு வாங்கியவர் கலைஞர். அன்று திமுகவிற்கு அலுவலகம் கிடையாது. முக்கிய முடிவுகள் எடுக்க இரவு அண்ணா கழக நிர்வாகிகள் சென்னை கடற்கரையில் கூட்டி முடிவெடுப்பார். அதை நினைவுதரும் வகையில் தான் அண்ணாவிற்கு நினைவு இடம் அமைத்தேன் ஆகவே என்னையும் இதே இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காகவே நீதி மன்றம் சென்று வென்று கடற்கரையில் அடக்கம் செய்தோம். அன்று உதவியது ஒரு பெண் அதிகாரி இதையெல்லாம் மனதில் வைத்தே மகளிர் உயர்வுக்கு வழி வகுத்தவர் தமிழ்நாடு முதல்வர். தலைவர்கள் மக்களுக்கு செய்த பணி சென்று அடைந்துள்ளது. இதை நீங்கள் அதை பின்பற்ற வேண்டும். கருத்து வேறுப்பாடுகளை தூக்கி எரிந்துவிட்டு நீங்கள் தேர்தலில் பொறுப்போடு பணியாற்ற வேண்டும். 74 வெள்ளி விழா 99 பொன் விழா அப்போதும் கழகம் ஆட்சி நடந்தது. பவளவிழாவிலும் கழக ஆட்சி தான். நூற்ராண்டு விழாவிலும் கழகம் தான் உங்களால் ஆட்சியில் இருக்கும் என்று கூறுகிறேன் என்றார்.

