• Wed. May 15th, 2024

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில், முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி..!

தீபாவளி பண்டிகை முடிந்து ஏழாம் நாள் கந்த சஷ்டி விழா முருகன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு தீபாவளி முடிந்து 7ம் நாளான இன்று கந்தசஷ்டி விழா கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில் முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் மட்டுமே அல்ல, அனைத்து முருகன் கோவில்களில் உள்ள சூரன் உருவத்தில் மிக உயரமான சூரன் குமரி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் முருகன் கோவிலில் உள்ளது என்ற வரலாற்று பெருமை இன்றும் தொடர்கிறது.இன்றுசூரனை, முருகப்பெருமான் வதை செய்யும் நிகழ்வை ,குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார் முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பிலும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் கால பெருமாள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஹெலன், நடேசன் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெரும் கூட்டமாக பொதுமக்கள் சூரன் வதை காட்சியை காணக் கூடியிருந்தார்கள்.

சூரனை தீக்கு இறையாக்கிய பின் சூரன் உருவம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மூங்கில் களை பொது மக்கள் போட்டிப் போட்டு எடுத்து சென்றாதின் நம்பிக்கை. இந்த மூங்கில்யை வீடு, மற்றும் வயல்களில் வைத்தால் எலியின் தொல்லை முழுமையாக இருக்காது என்ற நம்பிக்கை தொன்றுத்தொற்று இப்பகுதி விவசாய மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *