மதுரையில் தென்மண்டல வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்டத் தலைவர் அருளானந்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மரியலூயிஸ், பொருளாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் குமரய்யா பேசினார்.
தொகுதித் தலைவர் பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின் தங்கியுள்ள தென் மாவட்டங்களில் சீரான வளர்ச்சியை உருவாக்கிட மதுரையில் தென் மண்டல வளர்ச்சி வாரியம், அமைக்க வேண்டும். காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
