சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி செயலர் A.M.சேகர் ஏற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக B.மகேந்திரன், T.N.பாரதிதாசன், S.சுந்தரமாணிக்கம், MSK. முத்துப்பாண்டியன், R.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர், சிவகங்கை கட்டுமான தொழிலாளர் நலவாரியம், ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து கலை இலக்கிய போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் தியாகராஜன, உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.









