கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாகி இருந்த செல்வம் என்பவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கமல் குமார் வயது 53 என்பவர் சொகுசு கார் கொடுத்து உதவி யதாக கூறி தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து விசாரணை நடத்தியதில் கமல் குமார் சென்னையை சேர்ந்த பாபு என்பவர் மூலம் செல்வம் அறிமுகம் கிடைத்துள்ளது .

செல்வம் கமல் குமாரை தொழில் கூட்டாளியாக வைத்து கொள்வதாக கூறி அவரிடம் இருந்து 43 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு சொகுசு கார் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது . மேலும் கடந்த 01-04-2025 தேதி பெங்களூர் சென்று 02-04-2025 அன்று ஹைதராபாத் சென்று தான் பயன்படுத்திய சொகுசு காரை செல்வத்திடம் கொடுத்து விட்டு அவரிடம் இருந்த சொகுகார் மற்றும் லேப்டாப் மற்றும் செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை வாங்கிக்கொண்டு சென்னை வந்து விட்டதாகவும் செல்வம் செல்போன் மூலம் தொடர் கொண்டுள்ளார்.

ஆவடி கூட்டு ரோட்டில் சொகுசு கார் மற்றும் லேப்டாப் மற்றும் செல்போனை கொண்டு கொடுக்கும் படி கூறியதாக கூறி நேற்று காலை ஆவட்டி கூட்டு ரோடு வந்தவரை தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் லேப்டாப் மற்றும் செல்போன் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)