• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவிலில் நவராத்திரி கொலு விழா..!

ByKalamegam Viswanathan

Oct 15, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது.

மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு நவராத்திரி கொலுவிழாவின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து கொலு நடைபெற்றது. விழாவில் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பக்தர்களின் பாடல்களுடன் சிறப்பாக பூஜையுடன் கொலு விழா நடைபெற்றது.

திருக்கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.