கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அன்று பொதுமக்கள் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி 10 நாட்கள் விழாவாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலங்காலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இத்திருவிழாவின் இரண்டாவது நாளில் அம்மன் சன்னதி வழியாக பூத வாகனத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை உடன் முன் செல்ல ஜொலிக்கும் அன்ன வாகனத்தில் மதுரையின் மீனாட்சி மாசி வீதிகளில் வலம் வந்தனர். முன்னதாக கோவிலின் பார்வதி யானை முன் செல்ல அதன் பின் கரகாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம், போன்ற ஆட்டங்களை ஆடிக் கொண்டும் மீனாட்சி கருப்பன் அய்யனார் சிவன் போன்ற வேடங்களை அணிந்து கொண்டு குழந்தைகள் உற்சாகத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வின் போது அதிக விசை கொண்ட பம்ப்புகள் பயன்படுத்த கூடாது என்று கோயில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், தண்ணீர் பாக்கெட்டை பற்களால் கடித்து அதிலிருந்து சுவாமி மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டாம் என்று பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் : புதிய கட்டுப்பாடு
              
                               
                  












; ?>)
; ?>)
; ?>)