• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கலாஷா நுண்கலை நகைகள் கேப்ஸ் கோல்டின் ஒரு அங்கம், 1901ல் துவங்கப்பட்டது.

BySeenu

Jul 10, 2024

கோவை அவிநாசி ரோடு ரெஸிடென்ஸி டவரில் ஜூலை 8, 9, 10 தேதிகளில் கலாஷாவின் நுண்நகை கண்காட்சி, கைவினை நகைகளின் கண்காட்சி நடைபெறுகிறது. கோவையில் தனித்துவமிக்க சலுகைகளுடன் விற்பனை துவங்குகிறது.

இதில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
சீமா செந்தில் ( இயக்குனர் – ரத்தினம் குழுமம்) லட்சுமி மோகன் ( நிர்வாக இயக்குனர் – பிரிக்கால் ஹோல்டிங்) புவனா சதீஷ் ( ஸ்பார்க்லர்ஸ் பேட்மின்டன் அகாடமி உரிமையாளர்) கீர்த்தனா மனோஜ் ( இயக்குனர் – கார்த்திகை டெக்ஸ்டைல் மில்ஸ்)அட்வ் முருகம்பாள் சுந்தரவடிவேலு ( ரோட்டரி மாவட்டம் 3201 – முதன்மை பெண்மணி) உள்ளிட்டோர் துவக்க தனித்துவமிக்க நகை காண்காட்சியின் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

கண்காட்சியில் தனித்துவமிக்க தங்கம், வைரம் மற்றும் ஜடாவு நகைகள் அழகிய வடிவமைப்பில் இடம் பெற்றுள்ளன. கலாஷா, தங்கம், வைரங்கள் மற்றும் போல்கா நகைகளின் இந்தியாவின் மாபெரும் களஞ்சியமாக உள்ளது. கலாஷா இயக்குனர் அபிஷேக் சந்தா, ” இந்த மாபெரும் உயர்தர, நேர்த்தியான கண்காட்சி, எவ்வித லாபநோக்கமும் இல்லாமல் நடத்தப்படுகிறது. கோவை வாடிக்கையாளர்களுக்கென புதுமையான, சர்வதேச அளவில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், உருவாக்கப்பட்ட நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கோவில் நகைகள், அழகிய வைரக்கல் பதித்த நகைகள், மணப்பெண்களுக்கான வடிவமைக்கப்பட்ட நகைகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் பழைமைமிக்க பார்வையுடன், பாரம்பரியத்தையும் மனதில் கொண்டு, புதுமையான முறையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெண்ணின் பொக்கிஷத்திலும் இந்த நகைகள் இடம் பெற வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாஷா நுண்நகை இயக்குனர் அபிஷேக் சந்தா, பேசுகையில்,” கலாஷா நகை கண்காட்சியை நடத்துவதில் பரவசமடைந்தோம். இன்றைய கண்காட்சியில் மணப்பெண்களுக்கான வகைகள் உள்ளன. இதில் இடம் பெற்றுள்ள அழகிய வடிவமைப்பில் உள்ள ஒவ்வொரு நகையும், மிகவும் கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கப்பட்டவை. இவற்றை அணியும் பெண்கள், இளவரசியாக தோற்றம் பெறுவர். உங்களது நாளை சிறப்பாக்கும் காலத்தால் பழமையாகாத நகையாக இவைகள் இருக்கும் என நம்புகிறோம் என்றார்.