• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குலசேகரபட்டிணத்தில் கலைகட்டும் தசரா திருவிழா..

Byகாயத்ரி

Sep 26, 2022

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தசரா கொண்டாடப்படவில்லை.

இந்த ஆண்டு தசரா திருவிழா விமர்சையாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இன்று தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. காலை 9 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மதியம் முதல் இரவு வரை சிறப்பு ஆராதனைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். விழா நாட்கள் முழுவதும் தினமும் இரவு அம்மன் அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெறும் விழாவில் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் 10ம் திருநாள் (அக். 5) இரவு 12 மணிக்கு நடைபெறும். குலசை திருவிழாவிற்கு வெளிமாவட்ட மக்களும் அதிக அளவில் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.