• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைச்சங்கமம் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Feb 21, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தை திடலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இசை நாடக கலைஞர்கள் பேரவை மாநில தலைவர் எம்.ஆர். எம்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன்,செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி,பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம்,நையாண்டி மேளம், தப்பாட்டம், ராஜா ராணி ஆட்டம், மரக்கால் ஆட்டம்,வள்ளி திருமண இசை நாடகம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் பாலா ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், பூமிநாதன்,குருநாதன், சரசுராமு உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.