மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகள்., தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் அக்டோபர் 28,29,30 ஆம் தேதிகளில் விழா எடுத்து வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம், அதன் படி இன்று காலை முதலே பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாரை சாரையாக இந்த இரு தேவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

அந்த வகையில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன் தலைமையிலான நிர்வாகிகள், பாஜக சார்பில் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளிநரசிங்க பெருமாள் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் பார்வட் ப்ளாக் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,
இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து வந்து தேவர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்., இளைஞர்களும் ஆரவாரத்துடன் உற்சாக நடனமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்., இந்த விழாவினால் உசிலம்பட்டி திருவிழா கோலம்பூண்டது.,














; ?>)
; ?>)
; ?>)