புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அதிமுக கட்சியின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக இளைஞர் பாசறை மற்றும்இளம் தலைமுறை விளையாட்டு அணி சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது.

இந்த கபாடி போட்டியை அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து தொடங்கி வைத்து தலைமை வகித்தார் . மேலும் அரிமளம் அரசு பள்ளி கபடி வீராங்கனைகளுக்கு மெடல் அணிவித்து மாணவிகளுக்கு மரியாதை செய்தார்.மேலும் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு அரிமளம் பேரூர் கழக செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.