திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு கபாடி போட்டி நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் கபாடி போட்டியை துவக்கி வைத்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி. உதயகுமார் கபடி போட்டி நிகழ்ச்சிக்கு விழா பேனர், அழைப்பிதழில் பெயர் இருந்தும் 2 நாள் போட்டிகளிலும் பங்கேற்காமல் புறக்கணிப்பு மதுரை அதிமுகவில் கோஷ்டி பூசல் குறிப்பிடத்தக்கது.


கபாடி போட்டியில் முதல் பரிசாக மதுரை கஸ்டம்ஸ் அணியினர் ரூபாய் 71 ஆயிரம் கோப்பை கேடயமும், 2வது பரிசாக கோபி பிரதர்ஸ் திருப்பரங்குன்றம் அணியினர் ரூபாய் 51 ஆயரம் கோப்பை கேடயமும், 3வது பரிசாக மதுரை மேல கல்லாங்குளம் அணியினர் ரூபாய் 31 ஆயிரம் கோப்பை கேடயமும், நான்காவது பரிசாக கருமாத்தூர் நேதாஜி அகடமி ரூபாய் 21 ஆயிரம் மற்றும் கோப்பை கேடயம் பெற்றனர்.
25அணிகள் பங்கு பெறும் 2 நாள் கபாடி போட்டிகளில் முதல் பரிசாக ரூபாய் 71 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை , 2வது பரிசாக ரூபாய் 51 ஆயிரம் மற்றும் கோப்பை ,
3வது பரிசாக ரூபாய் 3 1ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை , 4 வது பரிசாக ரூபாய் 21 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

மேலும் கலந்து கொள்ளும் 5 முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மற்றும் கேடயம் பரிசளிக்கப்பட்டது.

கபாடி போட்டி விழாவினை திருப்பரங்குன்றம் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக ராஜன் செல்லப்பா MLA துவக்கி வைத்தார். மதுரை கிழக்கு மாவட்ட MGR அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தனர். துவக்கிவைத்து பரிசு வழங்குபவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் பெயருக்கு போடப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் விழாவிற்கு வரவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் சிவபதி கலந்து கொண்டு கபடி போட்டியினை துவக்கி வைத்தார்.
