சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர் .பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் 15 அணிகள் பங்கு பெற்று விளையாடின.இதில் முதல் பரிசு தாயில்பட்டி அணி வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் பெற்றது,இரண்டாவது பரிசு சல்வார்பட்டி அணி ரூ5000 பரிசுத் தொகையும், மூன்றாம் பரிசு இறவார்பட்டி அணி 2000 பரிசு தொகையும் பெற்றது.

முதல் பரிசினை வென்ற தாயில்பட்டி அணி மாவட்ட அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக கபடி போட்டியினை பி .எஸ். ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் சோலைசாமி தொடங்கி வைத்தார். வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி, வெம்பக்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)மீனாட்சி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.