விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் மற்றும் சத்யா நகர் பகுதியில் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு ,படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றி நமதே என்ற இலவச கையேட்டினை அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியது கடந்த காலத்தில் நான் படிப்பதற்கு நமக்கு முந்தைய வகுப்பில் படித்தவர்கள் பயன்படுத்திய பழைய புத்தகங்களை வாங்கித்தான் படித்தேன் கஷ்டத்தின் காரணமாக புதியதாக புத்தகங்கள் வாங்க முடியாத நிலை இருந்தது .எம்ஜிஆர் சத்துணவு கொண்டு வந்து படிக்கின்ற குழந்தைகளுக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அம்மா ஜெயலலிதா ஆட்சியில் படிக்கின்ற மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், விலையில்லா லேப்டாப், மற்றும் புத்தகப் பைகள் எழுதுபொருட்கள் என அதிகளவில் கல்விக்காக நிதி வழங்கி மாணவ, மாணவிகளும், வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினார்.
இப்படி கல்வித்துறையில் அனைவரும் முயற்சி எடுத்தன் காரணமாக இன்று சிறந்த கல்வி நமக்கு கிடைத்து வருகிறது .

விருதுநகர் மாவட்டம் கல்வியில் முதலிடத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் வர முடியாத நிலை இருந்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச கையேடுகளை சிறந்த ஆசிரியர்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.
அதனை தற்போது வழங்குவதன் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள், நன்கு படித்து அதிக மதிப்பெண்களை பெற்று விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் முதலிடம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கையேடுகள் அருமையாக தயார் செய்யப்பட்டுள்ளன. தற்போது சிவகாசியில் சுற்றுவட்டார பகுதி பகுதிகளில் 10 கட்டங்களாக கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பயன்பெறுவார்கள். என கூறினார் நிகழ்ச்சியில் பிலிப் வாசு,கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.