விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் முருகன் காலனி, பேச்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த… கூலித்தொழிலாளியான… மரியதாஸ் – பாத்திமா மேரி அவர்களின் புதல்வன்… ஜேசுதாஸ் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சைபெற்று வரும் செய்தி அறிந்து.. அவரது பெற்றோர்களை தனது இல்லத்திற்கு அழைத்து.. வந்து ஜேசுதாஸ் பூரண குணமடைய மருத்துவ செலவிற்கு… ரூ50ஆயிரம் நிதியுதவியினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.





