விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் அமைந்துள்ள
அனைத்து பொதுமக்களுக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவடக்கத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோவிலின் திருப்பணிக்கு நிதி உதவி வழங்குமாறு கோவில் நிர்வாக கமிட்டியினர் ஆன்மீகத்தின் அடையாளமாக விளங்கும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கோவில் திருப்பணிக்கு ரூபாய் 75ஆயிரம் நிதியுதவி வழங்கி திருப்பணிகளை சிறப்பாக செய்யுமாறு கூறினார்.
இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்…