தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்று கட்சியினர் தொடர்ந்து அதிமுக வில் இணைந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியின் தீவிர களப்பணியாலும், அவரது செயல்பாடுகளாலும் , அவர் செய்யும் உதவியாலும் ஈர்க்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தனியார் மண்டபத்தில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த வேண்டுராயபுரம் பட்டாசு தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில் எந்த கட்சியையும் சாராத சுமார் 1000 ற்கும் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்தவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து ராஜேந்திரபாலாஜி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றுமாறும் தங்களுக்கு உண்டான மரியாதை கிடைக்கும் எனவும் ராஜேந்திரபாலாஜி கட்சியில் இணைந்தவர்களிடம் தெரிவித்தார்.









