தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ்சும்(27) . இவர், நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த போலீஸ் தம்பதியான சரவணன் -கிருஷ்ணகுமாரி ஆகியோரது மகள் சுபாஷினியை காதலித்ததாக சொல்லப்படுகிறது.

பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கடந்த 27ஆம் கே.டி.சி நகரில் சுபாஷினியின் சகோதரரான சுர்ஜித் பட்டப் பகலில் கவினை வெட்டி கொலை செய்தார். நெல்லையில் நடைபெற்ற இந்த ஆணவ படுகொலை தமிழகத்தை உலுக்கியது கொலைக்கு பின்னர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுர்ஜித் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
உடனடியாக, அவர்களை கைது செய்ய வேண்டும் என கவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். முதல் தகவல் அறிக்கையில் பெற்றோர்கள் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்யக்கோரி கடந்த 5 நாட்களாக கவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நேற்று அவர்கள் விசாரணையை தொடங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கேஎன் நேரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுமுகமங்கலத்திலுள்ள கவின் வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக அமைப்புகளும் கவினுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல் திருமாவளவன் நெல்லையில் போராட்டம் நடத்தினார். இதற்கிடையில் அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாகவும் சுபாஷினியின் தந்தை கைது செய்யப்பட்டதாலும் கவின் உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் உடற்கூறாய்வு செய்து வைக்கப்பட்டிருந்த கவின் உடல் இன்று அவரது தந்தையான சந்திரசேகர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக கவினின் உடலுக்கு அமைச்சர் கே என் நேரு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் இன்று நேரில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.