சாத்தூர் அருகே கே. மேட்டுப்பட்டி கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் சிலை திறப்பு விழாவில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிலையை திறந்து வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கே. மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் தொழிலாக மேற்கொண்டு வரும் இந்த ஊர் கிராமத்தினர் முத்துராமலிங்க தேவரை கடவுளாக நினைத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கே. மேட்டுப்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அலங்கரித்து இக்கோவிலுக்கு கிராம மக்கள் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)