சாத்தூரில் மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சாத்தூர் நகர திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்தும், தொகுதி மறு சீரமைப்பினை கண்டித்தும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பினால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில் காணொளி வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் பேசுகையில்..,
தொகுதி மறுவரை செய்யும்பொழுது மக்கள் தொகை கணக்கீடு கொண்டு வரையறை செய்வதால் தற்பொழுது உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் இதனால் தமிழகத்திற்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். இதனால் தமிழகம் மத்திய அரசின் பங்கீடுகளில் பெரும்பான்மை குறையும் என்றும் விளக்கம் அளித்தார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு மக்கள் தொகை கட்டுப்பாடு அமல்படுத்த கூறியபோது.., அதை சிரம் மேற்கொண்டு தமிழகம் முழுவதிலும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தியது இதனால் தற்பொழுது வடமாநிலங்களை விட தமிழகத்தில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதனால் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறினார். மேலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலங்களில் காலூன்ற முடிய வில்லை என்பதால் தொகுதி மறு வரையறை என்னும் பெயரில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தனக்கு அடையாளப்படுத்தியதும் அங்கீகாரம் கொடுத்ததும் இந்த சாத்தூர் தொகுதி தான் என்றும், எனவே இந்த சாத்தூர் தொகுதி மக்கள் எனது உறவினர்கள் என்றும், இவர்கள் நலனில் நான் எப்பொழுதும் அக்கறையுடன் செயல்படுவேன் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் திமுக நகரச் செயலாளர் குருசாமி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கடற்கரை, ராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் திமுக நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். இறுதியாக இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் அறிவித்த தமிழக ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)