• Fri. Dec 13th, 2024

ஜோதி திரைப்பட விமர்சனம்

ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஜோதி திரைப்படத்தில் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார்.

நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய வேலையாக பெங்களூரு செல்கிறார் சரவணன். அன்றிரவு ஷீலாவுக்கு கட்டாய அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் மர்மநபர்கள்.அதிரவைக்கும் இச்செயலைச் செய்தது யார்? எதற்காகச் செய்தார்கள்? செய்தவர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ஜோதி திரைப்படம்.நாயகி ஷீலாவின் பெயர் ஜோதி என்பதால் படத்துக்கு ஜோதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.அவரும் அந்த வேடத்துக்கேற்ப ஒளி கூட்டியிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாகப் புன்னகை தவழும் முகத்துடன் வலம்வரும் அவரா இப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என வியக்கும் வண்ணம் நடித்திருக்கிறார்.

கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்கும் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கிறார் நாயகன் வெற்றி. வேடத்துக்கேற்ப நடிக்க முயன்றிருக்கிறார்.அவருடன் கூடவே வரும் தலைமைக்காவலர் குமரவேல் வேடமும் நல்ல நடிப்பு.