• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தரைப்பலகை உடைந்த விபத்தில் வாலிபர் காயம்

Byகுமார்

Dec 8, 2021

மதுரையில் சாலையில் சென்ற அரசு பேருந்தின் தரைப்பலகை உடைந்த விபத்தில் சிக்கி வாலிபர் காயம்; பயணிகள் அதிர்ச்சி.

மதுரை வேம்படியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை மேல வெளி வீதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் பின் சக்கரத்தின் டயர் வெடித்ததில் அரசு பேருந்தில் பின்பகுதியில் டயரின் மேலே உள்ள இருக்கையில் அமர்ந்து வந்து பொன்ராஜ் என்பவரது மகன் திருநாவுகரசின் தரைப்பலகை உடைந்து தகரம் அவரது கணுக்காலில் உரசியதால் காயம் அடைந்தார்.

இதனை அடுத்து திருநாவுக்கரசை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பேருந்தின் பயணித்துக் கொண்டிருந்தபோது வாலிபருக்கு ஏற்பட்ட விபத்து பேருந்து பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.