• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடுரோட்டில் பழுதான அரசுப் பேருந்து – பயணிகள் அவதி

ByA.Tamilselvan

Jun 29, 2022

மதுரையில் நடு சாலையில் பழுதான அரசு குளிர்சாதன பேருந்து அவதிக்குள்ளாகி பயணிகள் பாலம் ஏறும் முன் பழுதானதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்சாதன அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பொழுது மதுரை பைபாஸ் சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகே சென்ற பொழுது அரசு குளிர்சாதன பேருந்தில் கிலச் திடீரென பழுதானது இதனால் சாலையில் பழுதாகி நடுரோட்டில் பேருந்தானது நின்றது அதில் பயணம் செய்த பயணிகள் பேருந்தை தள்ளி பாலத்தின் கீழே கொண்டு சென்றனர் பேருந்து பாலம் ஏறுவதற்கு முன்பே கிளர்ச்சி பழுதானதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது


கீழே இறங்கும் முன் பழுது ஏற்பட்டு இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலே குளிர்சாதன பேருந்துகள் மட்டுமல்லாது அனைத்து பேருந்துகளும் படுமோசமான இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் அதில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் சாதாரண பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர் கட்டணம் மட்டும் அரசு குளிர்சாதனப் பேருந்துகள் வாங்கி சாதாரண பேருந்துகளை அனுப்பி வைக்கிறார் என குற்றச்சாட்டு வைத்தனர்
மதுரையில் அடிக்கடி அரசு பேருந்துகள் இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது எனவேமுறையாக அரசுப்பருந்து அனைத்திலும் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது