• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமம் பகுதியில் கூட்டு பிரார்த்தனை.., சுவாமி முரளிதரனின் சொற்பொழிவு…

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும், கன்னி தெய்வத்தின் பாத சுவட்டில் நமது ஜனவரி 1_தேதி கூட்டு பிரார்தனையின் 18_வது சங்கமம் விவேகானந்தா கேந்திரத்தில் மக்களின் நான்காவது கடலாக கூடியுள்ளோம்.

கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் இந்த நிகழ்விற்கு இடம் தந்து உதவிய விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணனுக்கு எனது நன்றியை தெரிவிக்கும் வகையில், இங்கு நான்காம் கடலாக கூடியுள்ள மக்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி மகிழ்கிறோம் என முரளிதர சுவாமிகள் தெரிவித்து, ஜனவரி ஒன்றாம் நாள் ஆங்கில புத்தாண்டில் தொடரும் இந்த 18_வது ஆண்டு கூட்டு பிரார்த்தனை என தெரிவித்தவர்.

இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு தினமும் வேண்டிய வரங்களைத் தரும் கற்பக விருட்ச நாளாக கல்பதரு தினமாக பக்த்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை குளோபல் ஆர்கனைசேஷன் பார்டிவினிட்டி இந்திய டிரஸ்ட் (காட் இந்தியா டிரஸ்ட்) சார்பில் கல்பதரு தினத்தை யொட்டி மஹாரண்யம் ஸ்ரீ.ஸ்ரீ. முரளிதர சுவாமிஜியின் அருளுரை மற்றும் மகா மந்திர நாம கீர்த்தனை கூட்டு பிரார்த்தனையில், இந்த புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில், இந்த மகா மந்திர நாம கீர்த்தனை நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி ஒரு தவ பூமி ஆகும். இங்கு இருந்து தான் தேவி பகவதியம்மன் உலகிற்கே அருள் பாலிக்கிறாள். சுவாமி விவேகானந்தர் இந்த தலத்தில் தான் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மனின் கால் பாதத்தை பார்த்து தவம் இருந்தார்.

இலங்கையில் இருந்த சீதா பிராட்டிக்காக இங்கு இருந்து தான்,அனுமன் மலையை பெயர்த்துக் கொண்டு சென்றுள்ளார். நமது பாரத நாடு உலகுக்கு வழி காட்டக்கூடிய ஒரு வல்லரசாக மாறும்.ஜனவரி திங்கள் 22_ம் நாள் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு அதனுடைய பிரதி பலன் தெரியவரும் என அவரது உரையை முடித்தார்.