• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 நபர்களுக்கு பணி நியமன ஆணை

ByNamakkal Anjaneyar

Feb 17, 2024

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் படித்துவிட்டு வேலை இன்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசின்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது.

படித்துவிட்டு வேலை இன்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு உருவாக்குவதில் தமிழக அரசின் தொழிலாளர் நல மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கம் வகையில் வேலை வாய்ப்பு முகாம்
குமாரபாளையம் எக்ஸெல் பொரியியல் கல்லூரியில்
நடைபெற்றது

இந்த முகாமில் 75கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று கல்வி அடிப்படையிலும் அவர்கள் திறமை அடிப்படையிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது இதில் படித்து வேலை இல்லாத குமாரபாளையம் வட்டார பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 1300 க்கு மேற்பட்டோர் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர் தனியார் துறை நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 300 ககும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணையினை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி வழங்கினார்.