

திருச்செங்கோடு நகரப் பகுதி 31 வது வார்டு கரட்டுப்பாளையம் போயர் தெருவில் பழனியப்பா சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் பழனியப்பன் இவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒயர்கள் ஃபோக்கஸ் லைட்டுகள் தரை விரிப்புகள் ஆகியவற்றை அங்குள்ள தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் பூட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென தீப்பிடித்து எறிந்து புகை வெளியேறத் தொடங்கியுள்ளது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பழனியப்பனுக்கு தகவல் கொடுத்தனர் பொதுமக்கள் போராடி தீயை அணைக்க முயன்றனர் சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கும் என தெரிவித்தனர்.

