• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

4 கோயில்களில் நகை பணம் கொள்ளை..,

ByKalamegam Viswanathan

Aug 5, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் மேட்டு நீரேத் தான் கிராமங்களுக்கு செல்லும் வயல்வெளிச்சாலையில் அங்காள பரமேஸ்வரி வாலகுருநாதர் சாமி கோயிலும் மேட்டு நீரேத்தான் ஊருக்குள் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலிலும் அதை அடுத்து நீரேத் தான் மேட்டுநீரேத்தான் கிராம பொது மக்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோயில் கண்மாய் கரை அருகில் உள்ளது.

அதேபோல் புதுக்குளம் கண்மாய் சாலையில் ஓந்தாய் அம்மன் கோயில் உள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் ஒந்தாய் அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து. தங்க நகைகளையும் உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்தனர். அதன்பின் அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியலில் இருந்த பணமும் கொள்ளை அடித்தனர். அதன்பின் அய்யனார் கோவிலுக்கு சென்று பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டளனர். இன்று காலை அந்த பகுதியில் சென்றவர்களும் கோவில் பூசாரியும் கோயில்களில் பூட்டு உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வாடிப்பட்டி போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் ஒந்தாய் அம்மன் கோவிலில் ஆடி 18 சுவாமி கும்பிட்டு சாமிக்கு 8 பவுன் தங்க நகையை பூட்டி நேற்று மாலை மறுபூஜை செய்துள்ளனர். அதன்பின் 6 மணிக்கு மழை வந்ததால் நகையினை அப்படியே விட்டுவிட்டு மறுநாள் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதேபோல அங்காள பரமேஸ்வரி கோயிலில் உண்டியல் பணம் எண்ணி ரூ.57 ஆயிரம் கணக்கு பார்த்து உண்டியலில் வைத்துள்ளனர்.

மேலும் 2 1/2 பவுன் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.மேலும் மோப்பநாய் மற்றும் தடைய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவுகளை ஆய்வு செய்தனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நான்கு கோயில்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டு நீரேத்தான் ஊருக்குள் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலில் கொள்ளை அடித்தவர்கள் உண்டியலை அருகில் உள்ள வயல்வெளியில் தூக்கிப்போட்டு சென்றது. பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.