பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலைய நிறுவனமான ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ (Jean Louis David) தனது புதிய கிளையை கோவை சாய்பாபா காலனி பகுதியில் தொடங்க உள்ளது.

கடந்த 1961-ம் ஆண்டு பாரிஸ் நகரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான அழகு நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

65 ஆண்டுகால பிரெஞ்சு அழகுக்கலை பாரம்பரியத்தைக் கொண்ட இந்நிறுவனம், இந்தியாவில் தனது அடுத்தகட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் புதிய கிளையை துவங்கி உள்ளது.
தமிழகத்தில் இதுவே முதல் கிளையாகவும், இந்தியாவில் இரண்டாவது கிளையாகவும் அமைந்துள்ள இது தொடர்பான, செய்தியாளர்கள் சந்திப்பில் கிளையின் உரிமையாளர் சூர்யபிரகாஷ் கூறுகையில், அழகுக்கலைத் துறையில் உலக அளவில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ள ஜீன் லூயிஸ் டேவிட் நிறுவனத்தை கோவைக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

வாடிக்கையாளர்களின் முக அமைப்பு, தனித்துவம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் சிகை அலங்காரங்களை உருவாக்குவது இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.
தொழில்முனைவுத் துறையில் எனது அனுபவத்துடன், சர்வதேச நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் இணைத்து கோவையில் புதிய முயற்சியைத் தொடங்குகிறோம். எதிர்காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இந்நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்துவதே எங்களது இலக்கு என்றார்.