• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஜே.சி.பி. டிரைவர் பலி..,

ByPuthar Pandian P

Mar 22, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிப்பட்டி பிரிவு சிறுமலை அடிவாரத்தில் வசிக்கும் ஜான் கென்னடி மகன் அந்தோனிசாமி (வயது 25) என்பவர் ஜே.சி.பி. டிரைவர் ஆவார்.

நேற்று முன்தினம் அந்தோனிசாமி ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கொடைரோட்டிற்கு சென்றார். அதன் பிறகு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு ஜல்லிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து பள்ளபட்டிக்கு எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அந்தோனிசாமி திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று சிகிச்சை பலனின்றி அந்தோனிசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப் இன்ஸ்பெக்டர் சவட முத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.