• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ திரைவிமர்சனம்..!

Byவிஷா

Sep 29, 2023

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் உள்ளது. சைரன், ஜீனி, பிரதர், தனி ஒருவன் பார்ட் 2, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம், கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் முக்கிய வேடம் என அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தை, வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது எடுத்துள்ளார். தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா இதிலும் நடித்திருக்கிறார். படத்துக்கு படம் வித்தியாசத்தை காட்டும் அகமது, இந்த முறை சைக்கோ திரில்லர் கதையை கையில் எடுத்திருக்கிறார். இதில் முக்கிய வில்லனாக விஸ்வரூபம் படத்தில் நடித்த ராகுல் மிரட்டி இருக்கிறார்.

இதுபோக சார்லி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இறைவன் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இறைவன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தை பார்த்த பலரும் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் படத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.

படத்தில் ஹீரோ வில்லனுக்கான மோதல் எடுத்துக் கொள்ள சிறிது நேரம் ஆவதாகவும், ஆங்காங்கே முட்டுக்கட்டையாக பாடல்கள் உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.