• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்

ByA.Tamilselvan

Aug 27, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்றுதாக்கல் செய்யப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. . 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆணையம், 5 ஆண்டு விசாரணைக்கு பின் அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது.இதையடுத்து, இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்