• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ் மரியாதை..!

Byவிஷா

Feb 24, 2023

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமிழக மக்களுக்காக, அயராது உழைத்த ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து அவரது வழியில் பயணிப்போம்.” என்று கூறியுள்ளார்.