• Sat. Apr 27th, 2024

ஜன. 31ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை..

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பால் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வருகிற 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பால் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *