• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி

Byகுமார்

Jun 12, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

மதுரை அண்ணா நிலையம் அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு துறை அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றினர். மேலும், இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தாலுகாவை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கொண்டு வந்த மனுக்களை வழங்கினர்.

இதில் பட்டா, சிட்டா, அடங்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, உபகரணங்கள் கோரி விண்ணப்பித்தனர். கணவனை இறந்தோர் உதவித்தொகை ஆகியவை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வு, புதிதாக பெறப்படும் மனுகளுக்கும் தீர்வு காணப்பட இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.